Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மீனம் : ஐப்பசி ராசிபலன் மீனம் : ஐப்பசி ராசிபலன் ரிஷபம் : கார்த்திகை ராசி பலன் ரிஷபம் : கார்த்திகை ராசி பலன்
முதல் பக்கம் » தை ராசி பலன் ( 14.1.2022 முதல் 12.2.2022 வரை)
மேஷம்: கார்த்திகை ராசி பலன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2021
12:24

அசுவினி: தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடும் அசுவினி நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் மேன்மை பெற கூடுதல் கவனம் செலுத்தவும்.
சந்திராஷ்டமம்: டிச. 2, 3
அதிர்ஷ்ட நாள்: நவ.17; டிச.14
பரிகாரம் : விநாயகருக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

பரணி: பிரச்னை மிக்க சூழலில் கூட பக்குவமான அணுகுமுறையால் வெற்றி காணும் பரணி நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான சூழல் உருவாகும்.  நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மனம் போல ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். படிப்பில் மட்டும்  கவனம் செலுத்துவது அவசியம். பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவது மிகவும் அவசியம்.  
சந்திராஷ்டமம்: டிச.3, 4
அதிர்ஷ்ட நாள்: நவ.17; டிச.15
பரிகாரம்: வெள்ளியன்று  சுக்கிரனுக்கு தீபம் ஏற்ற செல்வம் சேரும்.

கார்த்திகை - 1: கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை உடைய கார்த்திகை நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மன திருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதுர்யம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். சமூகத்தில் பாராட்டு கிடைக்கும். உடல் சோர்வு உண்டாகலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் அக்கறையுடன் செயல்பட்டு சாதகமான பலன் பெறுவர். அடிக்கடி பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவர். நட்பால் நன்மை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: டிச.4, 5
அதிர்ஷ்ட நாள்: நவ.18
பரிகாரம் : சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள்.

 
மேலும் தை ராசி பலன் ( 14.1.2022 முதல் 12.2.2022 வரை) »
temple
அசுவினி: தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் அசுவினி நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் நினைத்த காரியத்தை ... மேலும்
 
temple
கார்த்திகை - 2, 3, 4: அடுத்தவர் யாரும் குறை கூறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் கார்த்திகை நட்சத்திர ... மேலும்
 
temple
மிருகசீரிடம் - 3, 4: அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருக்கும் ம்ருகசீரிஷ நட்சத்திர ... மேலும்
 
temple
புனர்பூசம் - 4: சொல்லாற்றல் மிக்க புனர்பூச நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் சாமர்த்தியமாக பேசி காரியத்தை ... மேலும்
 
temple
மகம்: சொந்த முயற்சியாலும், மனதுணிவுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் மக நட்சத்திர அன்பர்களே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.