Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: கார்த்திகை ராசி பலன் மிதுனம் : கார்த்திகை ராசி பலன் மிதுனம் : கார்த்திகை ராசி பலன்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
ரிஷபம் : கார்த்திகை ராசி பலன்
எழுத்தின் அளவு:
ரிஷபம் : கார்த்திகை ராசி பலன்

பதிவு செய்த நாள்

16 நவ
2021
12:11

கார்த்திகை - 2, 3 ,4:- சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய கார்த்திகை நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் உங்கள் ராசிக்கு 7ல் உலாவரும் ராசிநாதன் சூரியனால் அனைத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்து கூடும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திட்டமிட்ட பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். குடும்பத்தினர் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது நிம்மதியை தரும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். கலைத்துறையினருக்கு அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு காரிய வெற்றி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
சந்திராஷ்டமம்: டிச.4, 5
அதிர்ஷ்ட நாள்: நவ.18
பரிகாரம்: முருகனை வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

ரோகிணி: அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியம் உடைய ரோகிணி நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுபச் செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில், வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பாக திடீர் பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதுர்யத்தால் அதிகாரிகள் கொடுத்த பணிகளை விரைந்து முடிப்பர். பணியிடத்தில் செல்வாக்கு கூடும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். சகோதரவழியில் உதவி கிடைக்கும். அக்கம்பக்கத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.  கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். விருப்பம் போல ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.  நண்பர்களின் ஆதரவால் வளர்ச்சி காண்பர்.  
சந்திராஷ்டமம்: டிச.6
அதிர்ஷ்ட நாள்: நவ.19
பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூவால் அர்ச்சனை செய்யுங்கள்.

மிருகசீரிடம் - 1, 2: உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்யும் குணமுடைய மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதுர்யத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் அவ்வப்போது  குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களின் மனதில் நிம்மதி நிலைக்கும்.  உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். உறவினர் வகையில் திடீர் செலவு உண்டாகலாம். மாணவர்கள் நண்பர்களுடன் விழிப்புடன் பழகுவது நல்லது. பொழுதுபோக்கை கைவிட்டு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.  சந்திராஷ்டமம்: டிச.7
அதிர்ஷ்ட நாள்: நவ.20
பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்க பிரச்னை தீரும்.

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar