பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, வாராகி அம்மன் கோவிலில், பஞ்சமி திதி பூஜை நடைபெற்றது. பொள்ளாச்சி அருகே, திப்பம்பட்டி ஸ்ரீ மும்மூர்த்தி ஆண்டவர், வாராகி அம்மன் கோவிலில், தேய்பிறை பஞ்சமி திதியையொட்டி சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், பஞ்சமி திதி வழிபாடு நடந்தது.