Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பன் கோவில் பிரம்மோற்சவம் ... வாராகி அம்மனுக்கு பஞ்சமி திதி பூஜை வாராகி அம்மனுக்கு பஞ்சமி திதி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறங்காவலர்களை நியமிக்க 88 கோவில்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன
எழுத்தின் அளவு:
அறங்காவலர்களை நியமிக்க 88 கோவில்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன

பதிவு செய்த நாள்

26 நவ
2021
10:11

சென்னை :அறங்காவலர்கள் நியமனத்திற்காக, ௮௮ கோவில்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அவை பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவர், என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை நுங்கம்பாக்கம், ஹிந்து சமய அறநிலையத் துறை தலைமையகத்தில், சட்டசபை அறிவிப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடந்தது. இதன்பின் அவர் கூறியதாவது:

கோவில்களின் மேம்பாடு குறித்த சீராய்வு கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. சட்டசபையில் 112 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களான வடபழநி ஆண்டவர். புரசைவாக்கம் கங்காதீஸ்வரர்; திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி; மதுரை கூடலழகர்; சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் உள்ளிட்ட, 451 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பழநி தண்டாயுதபாணி கோவிலில், 250 கோடி; திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், 300 கோடி. பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், 125 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட உள்ளன. இந்த திருப்பணிகள் முடிந்தவுடன் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.அறங்காவலர்கள் நியமனத்திற்காக, 32 மாவட்டங்களில் மாவட்ட குழுக்கள் நியமனம் குறித்து விளம்பரம் வெளியிட்டு, ௮௮ கோவில்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்கள் பரீசிலிக்கப்பட்டு, தகுதியுடைய அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படுவர்.

தமிழகத்தில் உள்ள 40 சிறிய கோவில்களின் குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. மதுரவாயல் கைலாசநாதர் கோவிலில் புதிதாக குளம் அமைக்க, 2 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்து, பணிகள் துவக்கப்பட உள்ளன.சிலைகள் கடத்தலை தடுக்க, 3,087 கோவில்களில் பாதுகாப்பு அறை அமைக்க 308.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்
பட்டுள்ளது. தற்போது, வடபழநி ஆண்டவர் கோவிலில் ஒரு பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுஉள்ளது. விரைவில், அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு அறை அமைக்கப்படும். ஓதுவார், அர்ச்சகர், வேத பாராயணம், நாதஸ்வரம் பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் அந்தந்த கோவிலின் தேவைக்கேற்ப பணிஅமர்த்தப்படுவர். நிதி வசதி இல்லாத கோவில்களில், ஒரு கால பூஜை நடத்த, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். ஆலோசனை கூட்டத்தில் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பிரசாந்தி நிலையத்தில், இன்று (நவ., 23) சத்ய சாய்பாபா பிறந்த நாள் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
அவிநாசி; கார்த்திகை மாத தேய்பிறை ஜென்மாஷ்டமி முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கண்ணுக்கோடு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்சிவ சிவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar