சின்ன மாரியம்மன் கோவில் விழா: கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2021 10:11
ஈரோடு: கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் முன்பு நடப்பட்டிருந்த கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர். சின்ன மாரியம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஈரோடு கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் மற்றும் சின்ன மாரியம்மன் கோயில் குண்டம் தோ்த் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் நேற்று, கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர். சின்ன மாரியம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். டிசம்பா் 5ம் தேதி குண்டம் இறங்குதல், தோ்வடம் பிடித்தலும், 6ம் தேதி கோயில் கரகம் எடுத்தல், 7ம் தேதி பொங்கல் விழாவும், முப்பாட்டு, மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.