பதிவு செய்த நாள்
10
டிச
2021
04:12
சென்னிமலை: எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில், திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
சென்னிமலை அருகேயுள்ள எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில், சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த மாதம், 24ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கம்பம் நடும் நிகழ்வு நடக்கவிருந்த நிலையில், விழா ரத்து செய்யப்படுவதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், பூச்சாட்டுதல் நடந்த பிறகு, விழாவை ரத்து செய்யக்கூடாது என தெரிவித்தனர். இதையடுத்து கோவில் நிர்வாகிகளுடன் அறநிலையத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த, 1ம் தேதி இரவு கம்பம் நடப்பட்ட நிலையில், முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. அண்ணாமலைபாளையம், புதுவலசு, நொய்யல், மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திட்டுப்பாறை, தாமரைக்காட்டுவலசு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, நூற்றுக்கணக்கான பெண்கள், மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பலர் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் கம்பம் நொய்யல் ஆற்றில் விடப்பட்டது.