கிறிஸ்துமஸ் பண்டிகை.: ராயப்பன்பட்டி சர்சில் விடிய விடிய பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2021 01:12
கம்பம்: ராயப்பன்பட்டி சர்ச்சில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடிய விடிய. பிரார்தனை நடைபெற்றது. நள்ளிரவு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கில், பொதுமக்கள் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கம்பம் பகுதியில் உள்ள சர்ச்சுகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு பிரார்த்தனைகள் நடைபெற்றது. பிரசித்தி பெற்றதும், மிகவும் புராதானமானதுமான ராயப்பன்பட்டி புனித பனிமய மாதா சர்ச்சில் விடிய விடிய பிரார்த்தனைகள் நடைபெற்றது. நள்ளிரவு பிரார்த்தனைகள் இரவு 11.30 மணிக்கு துவங்கி அதிகாலை வரை நடைபெற்றது. பங்குத்தந்தை ஜோசப் பிரார்த்தனை நடத்தினார். இந்த சர்ச்சில் உள்ள பிரமாண்ட மணி நள்ளிரவு ஒலிக்கப்பட்டது. இங்குள்ள பெரிய மணி பிரான்ஸ் நாட்டிலிருந்து கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்ப வாங்கப்பட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாட்களில் மட்டும் ஒலிக்கும் - இதன் ஒசை 10 கி.மீ.தூரத்திற்கு கேட்கும். பிரார்த்தனையில் பங்கேற்ற ஒவ்வொருவரும் இனிப்புகளை வழங்கி வாழ்ந்துக்களை பரிமாரிக் கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் சர்ச், வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இங்கிருவத கிறிஸ்துமஸ், குடில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.இதேபோல் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள சர்ச்சுகளிலும் விடிய விடிய பிரார்த்தனைகள் நடைபெற்றது.