தர்மசாஸ்தா அய்யப்பசுவாமி கோயிலில் மண்டலாபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2021 10:12
திருப்புத்துார் : திருப்புத்துார் தர்மசாஸ்தா அய்யப்பசுவாமி கோயிலில் மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு உற்ஸவர் திருவீதி வலம் வந்தார்.இக்கோயிலில் மண்டலாபிஷேக விழா டிச. 16ல் கணபதி,சாஸ்தா ேஹாமத்துடன் துவங்கியது. தினசரி காலையில் மூலவருக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நேற்று காலை 10:00 மணிக்கு மூலவருக்கு மண்டலாபிேஷகம் நடந்து வெள்ளி அங்கியில் அருள் பாலித்தார். தொடர்ந்து ஆராதனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மகா அபிஷேக தீபாராதனை நடந்தது. இரவில் மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்ஸவர் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் திருவீதி வலம் வந்தார். அய்யப்ப பக்தர்களின் பஜனை, மங்கள வாத்தியம், சரண கோஷங்களுடன் வீதிஉலா நடந்தது.ஏற்பாட்டினை தர்மசாஸ்தா ஆலயத்தினர், பக்தர்கள், அய்யப்ப சேவா சங்கம், மகரஜோதி யாத்திரைக்குழுவினர் செய்தனர்.