தேவநாத சவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2022 02:01
கடலுார்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் துவங்கியது.கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் நேற்று துவங்கியது. வரும் 12ம் தேதி வரை பகல் பத்து உற்சவம் நடக்கிறது. தினமும் காலை 11:00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து நுாறு கால் மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்து நாலாயிர திவ்ய பிரபந்தம் வாசிக்கப்படுகிறது.மாலை பெருமாளுக்கு சாற்றுமுறை முடிந்து 6:00 மணிக்கு சன்னதிக்கு எழுந்தருள்கிறார். வரும் 13ம் தேதி விடியற்காலை சொர்க்க வாசலில் சுவமி எழுந்தருள்கிறார். தொடர்ந்து ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜா சரவணக்குமார் மற்றும் பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.