திருக்குறுங்குடி நம்பி கோயிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2022 02:01
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பகல் பத்து உற்சவத்தில் அழகிய நம்பிராயர் பெருமாள் ராஜாங்கம் அலங்காரத்தில் அருள் பாலித்தார் . திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் அத்தியாயன உற்சவத்தில் , பகல் பத்து உற்சவம் நேற்று துவங்கியது. ராஜாங்கம் அலங்காரத்தில் கைசிக மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
11 நாட்கள் பகல் பத்து உற்சவம் நடக்கிறது . காலை , மாலை 2 வேளைகளிலும் , ராமானுஜ ஜீயர் எழுந்தருளி பெருமாள் 2 திருக்கோலங்களில் காட்சி கொடுக்கிறார். உற்சவத்தின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி, வரும் 13ம் தேதி மாலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிப்பார். அரை மணி நேரம் மட்டுமே சொர்க்கவாசல் திறக்கப்படும்.13ம் தேதியிலிருந்து 10 நாட்கள் ராப் பத்து உற்சவம் துவங்குகிறது . உற்சவத்தின் கடைசி நாளன்று வீடு விடை வைபவம் நடக்கிறது.