தன் அவதாரம் முடிந்து ராமபிரான் வைகுண்டம் புறப்பட்ட போது அனுமனையும் வருமாறு அழைத்தார். ஆனால், ‘வைகுண்டத்தில் உன்னை வணங்குவதற்குக் கோயில்கள் இருக்காது. ராமநாம கோஷம் இருக்காது. நான் பூலோகத்தில் இருந்து கொள்கிறேன்’ என பிரியாவிடை கொடுத்து, இன்றும் பூமியில் சிரஞ்சீவியாக அவர் நம்முடன் இருக்கிறார் என்பது சத்தியம். ராம நாமம் சொல்லி அனுமனை வணங்கினால், தீய சக்திகள் நெருங்காது. புத்தி, பலம், புகழ், தைரியம், பேச்சாற்றல், தேக ஆரோக்கியம், வீரம் உட்பட அனைத்தும் கிடைக்கும்.