பதிவு செய்த நாள்
08
ஜன
2022
11:01
பழநி: பழநி பாஜவினர் சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நலமுடன் பல காலம் வாழ மகா மிருத்யுஞ்சய யாகம் நடைபெற்றது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பஞ்சாப்பில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பழநி பாஜகவினர் சார்பில் மலைக்கோயில் அடிவாரம் புலிப்பாணி பாத்திர சாமிகள் ஆசிரமத்தில் பாரத பிரதமர் நலமுடன் பல காலம் வாழ மஹா மிருத்யுஞ்ஜய யாகம் நடைபெற்றது. இதில் வேத விற்பன்னர்களால் கணபதி ஹோமம் நடைபெற்ற பின் பிரதமர் நரேந்திர மோடியின் நட்சத்திரம், ராசி, லக்னம் கூறி மகா மிருத்யுஞ்சய யாகம் செய்தனர். இதில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் பாஸ்கர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் : பிரதமர் மோடி நல் ஆயுளுடன் பல்லாண்டு நீடூழி வாழ வேண்டி திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., சார்பில் மிருத்யுஞ்சய யாகம் நடந்தது.மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாநில பொது செயலாளர் ஸ்ரீனிவாசன், நகர் தலைவர் சரவணன், மாவட்ட தலைவர் சுசீந்திரன், அரசு தொடர்பு மாநில செயலாளர் ராஜரத்தினம், செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சசிராமன், ரவிபாலா, சகாதேவன், மண்டல் தலைவர் ராமதாஸ், முன்னாள் மண்டல் தலைவர் வேல்முருகன், நிர்வாகிகள் ராக்கப்பன், பாண்டியராஜன், பழனிச்சாமி, பார்த்திபன், அருண், பாண்டி, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.