சபரிமலைக்கு 11 ஆண்டுகளாக பாதயாத்திரை செல்லும் ஐய்யப்ப பக்தர்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2022 03:01
மூணாறு: தமிழகம் திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ஐய்யப்ப பக்தர் கார்த்திகேயன் 57, தனிமையில் 11 ஆண்டுகளாக சபரிமலைக்கு பாதயாத்திரை செல்கிறார். அவர் டிச.25 ல் அவினாசியில் இருந்து இருமுடி சுமந்து பயணத்தை தொடங்கினார். கோவை உக்கடம், பாலக்காடு, பட்டாம்பி, குருவாயூர், திருச்சூர், அங்கமாலி, பெரம்பாவூர், மூவாற்றுபுழா, கூத்தாட்டுகுளம் வழியாக நேற்று கோட்டயம் மாவட்டம் பாலா சென்றடைந்தார். வழி நெடுகிலும் கோயில்களில் தங்கி பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஜன.13 ல் சபரிமலை சென்றடையும் கார்த்திகேயன் மகர விளக்கு தரிசனத்திற்கு பிறகு பாதயாத்திரையாக வீடு திரும்புவதற்கு முடிவு செய்துள்ளார். கொரோனா ஒழிந்து நாடு நலம் பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் வீட்டை நோக்கி பாதயாத்திரை செல்ல உள்ளதாக அவர் தெரிவித்தார்.