காரைக்கால்: திருநள்ளாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு மட்டும் அனுமதி தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் சனிஸ்வரபகவான் கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகம் காணப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரி அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.இதனால் உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தர்பாரண்ஸ்வர் கோவிலில் தனி சன்னதியில் ஸ்ரீசனீஸ்வர பகவான் அருள்பலித்து வருகிறார். இதனால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் சனிக்கிழமை தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் தற்சமயம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம்.கர்நாடக ஆகிய மாநிலங்களில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய நாட்களில் ஆலயங்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சனிஸ்வரபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.இதனால் நேற்று தரிசனத்திற்க்கு வரும் பக்தர்கள் 2தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் ஆலயத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.முன்னதாக பக்தர்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும்.மேலும் நளன் குளத்தில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை.அண்டை மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கால் திருநள்ளாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.இதனால் கோவிலில் பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.