Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பழநி நகரம் வெறிச்சோடியது: ... ஸ்ரீரங்கம் பூபதித் திருநாள்: நம்பெருமாள் புறப்பாடு ஸ்ரீரங்கம் பூபதித் திருநாள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோயிலில் கல்கருட சேவை
எழுத்தின் அளவு:
நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோயிலில் கல்கருட சேவை

பதிவு செய்த நாள்

10 ஜன
2022
09:01

தஞ்சாவூர்: நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோயிலில் முக்கோடி தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை கல் கருட சேவை நடைபெற்றது. இதில் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் 20-வது தலமாகவும், பன்னிரு ஆழ்வார்களுல் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கு சீனிவாசபெருமாளே நேரில் ஆச்சாரியனாய் வந்து பஞ்சமஸ்காரம் செய்வித்த தலமாகவும் விளங்குவது நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுக்கு இருமுறை பங்குனி பெருவிழா மற்றும் முக்கோடி தெப்பத் திருவிழாவின் போது கல்கருட சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி முக்கோடி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து  விழா நாட்களில் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் உள்பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. இதில் நான்காம் நாள் விழாவான உலகபிரசித்திபெற்ற கருடசேவை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.  மாலை 6 மணியளவில் கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியிலிருந்து  கருடபகவானை சுமந்து வந்தனர். கருடபகவான் மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar