திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மிக முக்கிய விழாவான பூபதித் திருநாள்" என்றழைக்கப்படும் தைத்தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தைத்தேர் திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் ஸ்ரீநம்பெருமாள் உத்திரை வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். முதல் நாள் மாலைஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சியர்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடு நடைபெற்றது. 19ம் தேதி (தை 6ல்) அன்று ஆளும் பல்லக்கில் ஸ்ரீநம்பெருமாள் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருளும் வைபத்துடன் முடிவடைகிறது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அனைத்து உற்சவங்களும் கோயில் வளாகத்திலேயே நடைபெறும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை.