சூலூர்: செங்கத்துறை சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். செங்கத்துறை சவுடேஸ்வரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருவிழா நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. மதியம் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை பூஜை நடந்தது. மாலை, திருவீதி உலா நடந்தது. விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.