புதுச்சேரி: பெத்துசெட்டிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.இதில் கவர்னர் தமிழிசை, அமைச்சர் சாய் சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி., மாநில பா.ஜ., தலைவர் சாமிநாதன் ஆகியோர் பங்கேற்று வழிபட்டனர். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் கவர்னர் தமிழிசைக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப் பட்டது.