மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2022 09:01
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசித்திருவிழா 48 நாட்கள் நடைபெறும். மாசித்திருவிழா கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதன்படி, மீனாட்சியம்மன், பிரியாவிடை, சுந்தரேஸ்வரர் சித்திரை வீதிகளில் வலம் வருவதற்கு பதிலாக கோவிலுக்குள் உள்ள ஆடி வீதிகளில் வலம் வருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.