சிங்கம்புணரியில் இருந்து மடப்புரம் கோயிலுக்கு பாதயாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2022 11:02
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் இருந்து 400 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மடப்புரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். சிங்கம்புணரி முக்கந்தர் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தை அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். தொடர்ந்து 38 வது ஆண்டாக இப்பகுதியைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் குருசாமி சண்முகவேல் தலைமையில் பாதயாத்திரையாக மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மடப்புரம் கோயில்ல் உச்சி கால பூஜையில் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.