தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் தேரோட்டம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2022 03:02
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் மாசி மக பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி பெருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் வெவ்வேறு சமுதாயத்தினர் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது. முன்னதாக நேற்று காலை விநாயகர், சுப்பிரமணியர், பராக்கிரம பாண்டியர் ஆகியோர் சப்பரங்களில் வீதி உலா வந்தனர். பின்னர் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 8 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் திருவீதி உலா வந்தனர்.