தளவாய்புரம்: சேத்துார் எக்கலா தேவி அம்மன் திருக்கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தென்காசி ரோடு தேசிய நெடுஞ்சாலை அருகே எக்கலா தேவி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று காலை 4:30 மணிக்கு கொடிமரத்திற்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் மஹாதீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் மாலை அக்கினி சட்டி எடுக்கப்பட்டது. சிறப்பு நிகழ்ச்சியாக பூக்குழி திருவிழா 27ம் தேதி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் செல்லம் சிங்கம் புலி, செயலாளர் சுந்தர் தாஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.