Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி ஆண்டவர் கோவில் தெப்ப ... ராகு, கேது பெயர்ச்சி விழா: பக்தர்கள் தரிசனம் ராகு, கேது பெயர்ச்சி விழா: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் அம்மையார் சிவனிடம் ஐக்கியம்: பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்கால் அம்மையார் சிவனிடம் ஐக்கியம்: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

22 மார்
2022
08:03

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் நேற்று காரைக்கால் அம்மையார் சிவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடந்தது.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் கோவிலில் உள்ள அம்மையார் தனி சன்னதில் அருள்பலித்து வருகிறார்.சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர் அம்மையார் இவர் கடந்த கி.பி.5ம் நூற்றாண்டில் பிறந்தவர். நேற்று காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவை முன்னிட்டு அம்மையாருக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது.பின் வெள்ளிக்கவசம் அணிந்து அம்மையார் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின் மதியம் பக்தர்களுக்கு அண்ணதானம் வழக்கப்பட்டது. மாலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் காரைக்கால் அம்மையார் எழுந்தருளி வீதிஉலா நடந்தது.முக்கிய வீதிகள் வழியாக கைலாசநாதர் கோவிலில் நடராஜர் சன்னதியில் அம்மையார் எழுந்தருளினார்.அப்போது விளக்குகள் அனைக்கப்பட்டு அம்மையார் சிவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் நாஜிம்எம்.எல்.ஏ.,அறங்காவலர் குழுவினர் தலைவர் கேசவன்,செயலாளர் பக்கிரிசாமி,பொருளாளர் ரஞ்சன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அம்மையாரை வழிப்பட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ... மேலும்
 
temple news
திருமலை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை ... மேலும்
 
temple news
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற லால் சவுக் பகுதியில் தீபாவளி பண்டிகை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா, வரும் 15ல், கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar