அசுரர்களிடம் இருந்து தங்களைக் காக்கும்படி அம்பிகையை தேவர்கள் வேண்டினர். அதற்காக தன் உடலில் இருந்து கருமை நிறத்தில், காளியை உருவாக்கி போர் புரிய அனுப்பினாள். அதனால் வெள்ளை நிறத்தவளாக அம்பிகை காட்சியளித்தால் ‘கவுரி’ என பெயர் பெற்றாள். ‘கவுரம்’ என்றால் வெண்மை. (குறிப்பு: 1.கருமையும், வெண்மையும் கலந்ததால் பச்சை நிறம் கொண்டவள் பார்வதி. 2. கருமை நிறம் கொண்டவள் காளி 3. வெண்ணிறம் கொண்டவள் கவுரி)