* கடவுளிடம் குறையை சொல். என்ன வேண்டுமோ கேள். நிச்சயம் அவர் கொடுப்பார். * தவறு என தெரிந்தும் அதை செய்பவன் கண் இருந்தும் குருடனாவான். * தன்னலத்தை மறந்து செயல்படுவதே கடவுளை அடையும் வழி. * புலன்களை கட்டுப்படுத்து. மனம் உன் பேச்சை கேட்கும். * நெருப்பில்லாமல் சமையல் இல்லை. ஞானம் இல்லாமல் மோட்சம் இல்லை. * உனக்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்து மகிழ்ச்சியாக வாழு. * பயன்தராத வார்த்தைகளை பேசாதே. * தனிமையில் இருக்கும்போதுதான் நீ யார் என்பது உனக்கே புரியவரும். * பிறர் உன்னை வாழ்த்தினாலும், தாழ்த்தினாலும் கண்டுகொள்ளாதே. * விருந்தினரை போலவே வறுமையும், செல்வமும் தற்காலிகமானது. * ‘மூச்சுள்ள வரை உன்னை நினைக்க வேண்டும்’ என்று கடவுளிடம் கேளு. * தீய எண்ணத்தை அகற்ற நல்லோரின் உதவியை நாடு. * எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவனே உயர்ந்த மனிதன். * உழைப்பால் சிறிய தொகை கிடைத்தாலும் அது மதிப்புமிக்கது.