சிங்கப்பெருமாள் கோவில், பாரேரி கிராம தண்டு துலுக்காணத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது.சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த, பாரேரி கிராமத்தில் தண்டு துலுக்காணத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு மண்டபம் மற்றும் கோபுரம் கட்டி, கும்பாபிஷேகம் நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர்.அதன்படி சமீபத்தில், மண்டபம் மற்றும் கோபுரம் கட்டினர். இதற்கான பூஜை நடத்தப்பட்டது.தொடர்ந்து, நேற்று காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை முடிந்து, யாகத்தில் வைக்கப்பட்டிருந்த கலசங்கள் எடுத்து செல்லப்பட்டு, கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.