Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவதானம் கோயிலில் வைகாசி விசாக ... கமுதி அய்யனார் கோயில் திருவிழாவில் மாட்டுவண்டி பந்தயம் கமுதி அய்யனார் கோயில் திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2022
04:06

சென்னை : வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழாவின் இரண்டாம் நாளான இன்று காலை சூரிய பிரபையில் வள்ளி தேவசேனா சமேதராக முருகப்பெருமான் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலையில் வரசித்தி விநாயகர் திருவீதி உலா நடந்தது. நேற்று காலையில் 5.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் விநாயகர், முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சாமி வீதி உலா நடக்கிறது. விழாவில் இன்று காலை சூரிய பிரபையில் வள்ளி தேவசேனா சமேதராக முருகப்பெருமான் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9ம் தேதி காலை 7.30 மணிக்கு நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு ஒய்யாரி உற்சவம் நடக்கிறது. 11ம் தேதி இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நடக்கிறது. 12ம்தேதி காலை 9 மணிக்கு சண்முகர் வீதி உலாவும், 10 மணிக்கு தீர்த்தவாரியும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. 13ம்தேதி சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. அதன்பிறகு 14ம் தேதி முதல் 23ம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar