அன்னூர்: மசாண்டிபாளையம் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காரே கவுண்டன் பாளையம் ஊராட்சி, மசாண்டிபாளையம், புதுத் தோட்டத்தில் புதிதாக கருணையாத்தாள் கோவில் நிர்மாணிக்கப்பட்டது, இதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை முதல் கால வேள்வி வழிபாடுடன் துவங்கியது. நேற்று அதிகாலையில் இரண்டாம் கால வேள்வியும், காலை 7:00 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகமும் நடந்தது, இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. வேள்வி வழிபாடுகளை, பேரூர் சாந்தலிங்கர் அருள்நெறி மன்றத்தினர் செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.