பதிவு செய்த நாள்
10
ஜூன்
2022
06:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம், வைகாசி விசாகப்பெருவிழாவின் ஏழாம் நாளான நேற்று, வள்ளி, தெய்வானையருடன் சுப்பிரமணியர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, பவனி வந்தார்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், வைகாசி விசாகப்பெருவிழா இம்மாதம் 3ல், கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருகிறார். ஏழாம் நாள் உற்சவமான நேற்று காலை 7:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில், வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளிய சுப்பிரமணியர், நான்கு ராஜ வீதிகளில் பவனி வந்தார்.வழிநெடுகிலும் பக்தர்கள், கற்பூர தீப ஆராதனை காண்பித்து, முருகப் பெருமானை வழிபட்டனர்.பத்தாம் நாள் உற்சவமான வரும், 12ல் சண்முகப்பெருமான் தேரில் பவனி வருகிறார். 13ல், காலை, வள்ளி திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் அர்ச்சகர்கள், உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் இணைந்து செய்கின்றனர்.