சதுரகிரியில் ஆனி மாத அமாவாசை வழிபாடு; ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2022 06:06
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் கொண்டு செல்கின்றன என்பது குறித்து வனத்துறையினர் சோதனை செய்து, மாஸ்க் அணிய அறிவுறுத்தி மலை ஏற அனுமதித்தனர். வெயிலும், குளுமையும் மாறி, மாறி இருந்த சூழலில் மதியம் 12:00 மணி வரை, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு சிறப்பு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீஸ் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.