கூவம் திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில் 6ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2022 06:07
கூவம்: கூவம் திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில், வரும் 6ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கூவம் ஊராட்சியில் அமைந்துள்ளது, திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தக சுவாமி கோவில்.இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 6ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4:00 மணிக்கு புனர் பூஜையும், மஹா பூர்ணாஹூதியும், கலசங்கள் ஆய பிரதஷ்னமும் நடைபெறும். பின் காலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் கடக லக்கனத்தில் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதிரிபுராந்தகர் சுவாமி மற்றும் அனைத்து சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.பின், காலை 11:00 மணிக்கு மஹா அபிஷேகமும், அன்னதானமும் நடைபெறும். தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறும்.விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழுவினரும், ஹிந்து சமய அறநிலையத்துறையினரும், கிராம பொதுமக்களும் செய்து வருகின்றனர்.