Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிரக தோஷம் நீங்க... வீட்டில் வழிபடுவதற்கும், கோயிலில் ...
முதல் பக்கம் » துளிகள்
கரிநாள் என்பது என்ன?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2022
02:07

மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுக்குள் பரணி, கிருத்திகை, ஆயில்யம், பூரட்டாதி போன்ற சில நட்சத்திரங்களும், 15 திதிகளுக்குள் அஷ்டமி, நவமி போன்ற சில திதிகளும், 7 கிழமைகளுக்குள் செவ்வாய், சனி போன்ற சில கிழமைகளும் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கும், நீண்ட தூர பிரயாணம் போன்றவற்றுக்கும் விலக்கப்பட வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம் அதைப்போலவே, ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சில நாட்களில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இதையே கரிநாள் என்று கூறுகிறார்கள். வடமொழி நூல்களும் இந்தக் கரிநாளை தக்த யோகம் என்று குறிப்பிடுகின்றன. இந்த கரி நாட்கள் என்பவை தமிழ் மாதத்தின் குறிப்பிட்ட தேதிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. வருஷாதி நூல் என்னும் ஜோதிட புத்தகம், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் எந்தெந்த நாட்கள் (தேதிகள்) கரிநாட்கள் என்று கூறுகின்றன.

சித்திரை மாதம், 6,15ஆம் தேதிகள்; வைகாசி 7, 16,17 ஆம் தேதிகள்; ஆனி 1,6 ஆம் தேதிகள்; ஆடி 2,10,20 ஆம் தேதிகள்; ஆவணி 2.9,28 ஆம் தேதிகள்; புரட்டாசி 16,29 ஆம் தேதிகள், ஐப்பசி 6 ஆம் தேதி; கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட்கிழமை மற்றும் 1,10,17 ஆம் தேதிகள், மார்கழி 6,9,11 ஆம் தேதிகள்; தை 1,2,3,11,17 ஆம் தேதிகள்; மாசி 15,16,17 ஆம் தேதிகள்; பங்குனி 6,5,19 ஆம் தேதிகள் என்பதாக, வருஷத்தில் மொத்தம் 34 நாட்கள் கரிநாட்கள் எனப்படும். அனைத்து வருஷங்களிலும் இந்தக் குறிப்பிட்ட தேதிகள்தான் கரி நாட்கள். இதில் மாறுதலில்லை. ஆகவே, இந்தக் கரி நாட்களில் திருமணம், கிருஹபிரவேசம், சீமந்தம், நீண்ட தூர பிரயாணம்  போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், பூஜைகள் ஹோமங்கள் பரிகாரங்கள் ஆகியவற்றை கரி நாட்களில் செய்யலாம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
இந்தியாவில் சூரிய பகவானுக்கு சில இடங்களில் மட்டுமே கோவில் உள்ளது. இதில் பெங்களூரு தொம்மலுாரில் உள்ள ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகா மகாலிதுர்கா கிராமத்தில், மகாலிதுர்கா மலை உள்ளது. கடல் ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் புராதன கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலும் தனித்தனி சிறப்புகள் ... மேலும்
 
temple news
விஷ்ணுபதி புண்ணிய காலமான இன்று படித்தால் நன்மை பெருகும்.ஓம் அன்பின் சுடரே போற்றிஓம் அளவிலா அறமே ... மேலும்
 
temple news
* எல்லாம் நன்மைக்கே. எதைக் கண்டும் கலங்காதே.  * நிம்மதியைத் தேடி அலையாதே. அது உன் மனதில்தான் உள்ளது. * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar