பதிவு செய்த நாள்
04
ஜூலை
2022
02:07
குன்னூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ளது. சிவசுப்ரமண்ய சுவாமி கோயில். குழந்தைகள் கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக் குழந்தையை, படி, உலக்கை, நெல், அரிசியுடன், இக்கோயிலுக்குத் தத்துக் கொடுத்து விடுகின்றனர். சுவாமிக்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், ஒரு குறிப்பிட்ட தொகையை கோயிலுக்குக் காணிக்கையாகத் தந்து குழந்தையை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர். இப்படிச் செய்வதால் தோஷங்கள் விலகி, குழந்தை நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வளரும் என்பது நம்பிக்கை. இது மட்டுமின்றி, இக்கோயிலுள்ள விஷ்ணு துர்கை சன்னிதியின் முன் எட்டு அடி நீளமும், எட்டு அடி அகலமும், பத்து அடி ஆழமும் கொண்ட பிரம்மாண்ட ஹோம குண்டம் அமைக்கப்பட்டு, சண்டி ஹோமம் நடத்தப்படுகிறது. வியாபாரிகள் இச்சன்னிதியில் புதுக் கணக்குத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால், வியாபாரம் செழிப்பதோடு அதிக லாபமும் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.