Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ஊஞ்சல் ... செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆனித்தேரோட்டம் கோலாகலம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெளிமாநில கோயில்களுக்கு மீனாட்சி அம்மன் கோயில் பட்டு வஸ்திரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெளிமாநில கோயில்களுக்கு மீனாட்சி அம்மன் கோயில் பட்டு வஸ்திரம்!

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2022
08:07

மதுரை : உ.பி., காசி விஸ்வநாதர் கோயில், ஆந்திரா சித்துார் காளஹஸ்தி கோயில், கேரளா திருச்சூர் வடக்குந்நாதர் கோயில், கர்நாடகா முருதீஸ்வரா கோயில் உட்பட வெளிமாநில கோயில்  திருவிழாக்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் அனுப்பப்பட உள்ளன.

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் போது ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியன்று ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் சார்பில் மாலை அணிவிக்கப்படுகிறது. அதேபோல் ஸ்ரீரங்கம்  கோயிலுக்கும் மாலை அனுப்பப்படுகிறது. பாரம்பரியமாக நடந்து வரும் இந்நிகழ்வை போன்று, வருங்காலத்தில் வெளிமாநில கோயில்களுடன் நல்லுறவு ஏற்படுத்த அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.  இதன்படி மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் காசி, காளஹஸ்தி, திருச்சூர் கோயில்களுக்கு பட்டு வஸ்திரம் வழங்கவும், அதற்கு பதிலாக அந்த கோயில்கள் சார்பில் பட்டு வஸ்திரம், மாலை வழங்கவும்  பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முதற்கட்டமாக காளஹஸ்தி, திருச்சூர் கோயில் நிர்வாகத்திடம் மீனாட்சி கோயில் நிர்வாகிகள் பேசி உள்ளனர். அதேபோல் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்,  குருவாயூர் கோயில் உட்பட வெளிமாநில கோயில்களுக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரம், மாலை அனுப்பப்பட உள்ளது. இதன்மூலம் வெளிமாநிலங்களுக்கு இடையே ஒரு இணக்கமான  நல்லுறவு ஏற்படும் என அறநிலையத்துறை கருதுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar