போடி: போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆடித்திங்களை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர்.
* போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.