காரியாபட்டி: மல்லாங்கிணரில் வி.வி.வி., நகரில் நன்மை தரும் நாகம்மாள் கோவில் ஆடி திருவிழா நடந்தது. கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த திருவிழா, இந்த ஆண்டு போலாகாலமாக கொண்டாடப்பட்டது. முக்கிய நிகழ்வாக ஓடை கருப்பசாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பால்குடம் எடுத்து, அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.