திருப்புத்தூர்: திருப்புத்தூரில் பூசகர்களுக்கு 3 நாட்கள் நடந்த தமிழ் வேத ஆகம பயிற்சி முகாம் நிறைவடைந்தது.
திருப்புத்தூர் வட்டார கிராம கோயில் பூசகர்கள் முகாமில் பங்கேற்றனர். முகாம் நிறைவடைந்ததை அடுத்து வட்டார மக்கள் நல வேள்வி நடந்தது. வேள்வியை தமிழ் வேத ஆகம பாடசாலை சத்தியபாமா நடத்தினார். வேள்வி தீபாராதனைக்கு பின்னர் நடந்த நிறைவு விழாவில் மதுரை ஆதினம், துளாவூர் ஆதினம் ஆகியோர் ஆசியுரை ஆற்றினர். பயிற்சி பெற்ற பூசகர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர். ஆ.பி.இ.அ. கல்வியியல் கல்லூரி தாளாளர் ராமேஸ்வரன், பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி, சங்கம் பாண்டியன், கண்காணிப்பு விழிப்புணர்வு உறுப்பினர் நாராயணன், பேரூராட்சி கவுன்சிலர் சாந்தி, முன்னாள் வி.ஏ.ஒ. விஜயசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாட்டினை ஓம்பிரகாஷ், பாண்டி, துரைபாண்டியன், வேல்முருகன் செய்தனர்.