ஆரணிபட்டி அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் புரவியெடுப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2022 05:08
எஸ்.புதூர் : எஸ்.புதூர் அருகே ஆரணிபட்டியில் புரவியெடுப்பு திருவிழா நடந்தது. இவ்வொன்றியத்தில் மாந்தங்குடிப்பட்டி அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் புரவியெடுப்பு திருவிழாவையொட்டி ஆரணிபட்டி கிராம மக்கள் புதிய புரவிகள் செய்து வழிபாடு நடத்தினர். காலை கிராமத்தில் புரவிகளுக்கு சிறப்பு அலங்காரம் வழிபாடு செய்யப்பட்டது. மதியம் 2:15 மணிக்கு புரவிகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. 3 கி.மீ., தூரம் ஊர்வலமாக வந்து மாலை 4:00 மணிக்கு மாந்தங்குடிப்பட்டி அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலை அடைந்தது. அங்கு அய்யனாருக்கு ஆரணிபட்டி கிராம மக்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான புத்தகங்கள் பங்கேற்றனர்.