நயினார்கோவிலில் அம்மன் தபசு திருக்கோலம் : நாளை திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2022 05:08
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் ஆடிப்பூர திருக்கல்யாண விழாவில் அம்மன் தபசு திருக்கோல உற்சவம் நடந்தது.
இக்கோயிலில் ஆடிப்பூர விழா ஜூலை 23 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வந்தனர். ஜூலை 31 அன்று அம்மன் தேரில் அலங்காரமாகி கோயில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். தொடர்ந்து இன்று காலை 6:00 மணிக்கு சவுந்தர்ய நாயகி அம்மன் வெள்ளி கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் காட்சி அளித்தார். அப்போது கோயில் முன்புள்ள தபசு மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். பின்னர் காலை 8:00 மணிக்கு நாகநாத சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, தபசு மண்டபத்தின் முன்பு மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வீதி உலா நிறைவடைந்து. நாளை காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.