Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரி கோயில்களில் ... கண்ணகி தேவி கோயிலில் ஆடிப்பெருக்கு விழா கண்ணகி தேவி கோயிலில் ஆடிப்பெருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலையத்துறை அலட்சியத்தால் சிதிலமடைந்த சிவன் கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அறநிலையத்துறை அலட்சியத்தால் சிதிலமடைந்த சிவன் கோவில்

பதிவு செய்த நாள்

03 ஆக
2022
06:08

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே ஹிந்து சமய அறநிலையத்துறை சிதிலமடைந்த பழமையான சிவன் கோவிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி மாங்குடி கிராமத்தில் பழமையான சிவலோக நாயகி சமேத சிவலோகநாதர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் முன்மண்டபம் வவ்வால் நெற்றி அமைப்பில் உள்ளதால் சோழர் காலத்து கோவில் எனவும், முழுமையான செங்கல் திருப்பணியால் ஆன கோவிலாக இருப்பதால் நாயக்கர்கள் காலத்து கோவில் எனவும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இக்கோவிலில் மூலவர் சன்னதிக்கு  முன்பு வலதுபுறம் விநாயகரும், பெருமாளும், இடதுபுறம் காசி விஸ்வநாதரும், முருகனும், கோவில் வெளிப்பிரகாரத்தில் துர்க்கை, தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் தனித்தனி சன்னதியில் எழுந்தருளி இருந்தனர். இந்த கோவிலில் தேரும், கோவிலை சுற்றி தேரோடும் நான்கு மாட வீதிகள் இருந்துள்ளன. இந்த  கோவிலின் பராமரிப்புக்கு என 25 ஏக்கர் நிலம்வழங்கப்பட்டு இருந்துள்ளது. இவை அனைத்தும் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதால் வருவாய் இல்லாமல் போனது. வருவாய் இல்லாத இந்த கோவிலை பராமரிப்பதில் ஹிந்து சமய அறநிலையத்துறை அலட்சியம் காட்டியதால்  கோவில் முழுவதும் புதர் மண்டி நாளடைவில் சுற்றுச்சுவர், சுற்றுப் பிரகார மண்டபம், கோவிலின் முன் மண்டபம் என ஒன்றன்பின் ஒன்றாக  சிதிலமடைந்து விழுந்து விட்ட நிலையில் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகள் மட்டுமே தற்போது பழுதடைந்த நிலையில் எஞ்சி நிற்கின்றன. மண்டபங்கள் அனைத்தும் சேதம் அடைந்ததால் அங்கிருந்த விக்ரகங்கள் அனைத்தும் சுவாமி சன்னதிக்கு முன்பு  வைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலை சுற்றி இருந்த 2 தீர்த்தக் குளங்களும் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் கடந்த 30 ஆண்டுகளாக பூஜைகள் நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக மாங்குடி கிராமத்தை சேர்ந்த சரவணன் என்ற இளைஞர் தனது சொந்த செலவில் ஞானசேகரன் என்ற பூசாரியை நியமித்து ஒரு கால பூஜையை நடத்தி வருகிறார்.  


இந்நிலையில் சமீபத்தில் திருமணஞ்சேரி கோவில் செயல் அலுவலராக பொறுப்பேற்ற  நிர்மலா தேவி இந்த கோவிலின் நிலையை கண்டு கும்பாபிஷேகம்  நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் பலனாக  பழமை மாறாமல் கோவிலை மறு சீரமைப்பு செய்து கும்பாபிஷேகப் பணிகளை செய்து கொடுப்பதற்காக ஹிந்து சமய அறநிலைத்துறை, தொல்லியல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் திருப்பணி செய்வதற்கான பூர்வாங்க  பணிகள் எதையும் தொல்லியல் துறை செய்யவில்லை. இந்நிலையில்  தமிழக அரசு நிதி ஒதுக்கி கோவிலை விரைந்து பழமை மாறாமல் மறுசீரமைப்பு திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்திக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். மேலும் அரசு கொடுக்கும் நிதியில் முழுமையாக இந்த கோவிலை மறுசீரமைக்க முடியாது என்ற நிலையில் பக்தர்களும் தங்களால் இயன்ற நிதியை கொடுத்து பழமையான சிவன் கோவிலின் திருப்பணிகளை செய்திட உதவுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar