திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு பத்ரகாளியம்மன் கோயிலில் 21ம் ஆண்டு பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மாரநாடு கிராமத்தில் பத்ரகாளியம்மன் மற்றும் கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம், இந்தாண்டு பொங்கல் விழா காலை நடந்தது. ஏராளமான பெண்கள் அம்மனுக்கு முன்பாக பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பத்ரகாளியம்மன் கோயில் கும்பிடும் பங்காளிகள் மற்றம் பெண்ணடி மக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.