இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2022 10:08
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ஆடி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மத்தியபுரி அம்மனுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் ஆடி செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் உற்சவர் பிரதோஷ நாயகர் நாயகி நந்தியன் பெருமான் அபிஷேகம் ஆராதனை தீபாராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோயில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து தீபாராதனை நடைபெற்று பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இந்த வழிபாட்டில், பக்தர்கள், கண்காணிப்பாளர் கணபதி ராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.