Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி பால்குட விழா : குதிரையில் பவனி ... பரமக்குடி வரதராஜ பெருமாள் கோயிலில் 108 கலசாபிஷேகம் பரமக்குடி வரதராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று கோகுலாஷ்டாமி : கண்ணனை நினைக்காத நாளில்லையே ..
எழுத்தின் அளவு:
இன்று கோகுலாஷ்டாமி :  கண்ணனை நினைக்காத நாளில்லையே ..

பதிவு செய்த நாள்

19 ஆக
2022
07:08

கண்ணன் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் அவதரித்தவர். கண்ணனின் பிறந்தநாளை ஜென்மாஷ்டமியாக நாடு முழுவதும் நாளை கொண்டாடுகின்றோம். அன்றைய தினத்தில் வீட்டில் கிருஷ்ண வழிபாட்டை முன்னிட்டு மலர்கள், தேங்காய், பழங்கள் தவிர கண்ணனுக்கு பிடித்தமான பலகாரத்தை செய்து படையல் இடுவது வழக்கம்.

கோகுலாஷ்டமி அன்று குறிப்பாக, கிருஷ்ணனுக்குப் பிடித்த பால், தயிர், வெண்ணெய், அவல், பாயசம் ஆகியவற்றை வைத்து வழிபடுவது உண்டு. மேலும் சிலர் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த பலகாரங்களான சீடை, இனிப்பு சீடை, எள் உருண்டை, அக்கார அடிசல், பால் கொழுக்கட்டை, பால்கோவா, லட்டு, ரவா லட்டு, தேங்காய் பர்பி, திரட்டுப்பால், முறுக்கு என இவற்றில் எது முடியுமோ அதை செய்வார்கள்.

சுலபமாக வீட்டில் செய்யக்கூடிய சில இனிப்பு பலகாரத்தை எப்படி செய்வது என இப்போது பார்க்கலாம்.

ரவா லட்டு

தேவையான பொருட்கள்:

ரவை - ஒரு கப்
நெய் - 4 டீ ஸ்பூன்
சர்க்கரை - அரை கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய் பொடி செய்தது - கால் ஸ்பூன்
நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி - 10
சூடான பசும்பால் - அரை கப்

செய்முறை: முதலில் வாணலியில் நெய் ஊற்றி முந்திரி திராட்சையை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவையை சேர்த்து நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் மாற்றவும். அதில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல், பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதில் பசும்பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். உருண்டை பிடிக்க தேவையான பால் ஊற்றினால் போதுமானது. செய்வதற்கும் மிக எளிதான இனிப்பு இது.

தேங்காய் பர்பி

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 2 கப்
நாட்டு சர்க்கரை - 2 கப்
கடலை மாவு - 2 ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - சிறிதளவு

செய்முறை:  முதலில் நாட்டு சர்க்கரையை சிறிது தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும்வரை பாகு காய்ச்ச வேண்டும். பாகு பதம் வந்த சமயத்தில் தேங்காய் துருவலை போட்டு நன்கு கிளற வேண்டும். அந்த சமயத்தில் மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து, சிறிது நெய்விட்டு, அதில் கடலை மாவைப் போட்டு வறுத்து, தேங்காய்க் கவலையில் கொட்டி, அதனுடன் சிறிது ஏலக்காய்த் தூளையும் சேர்த்துக் கிளறுங்கள். அப்போது பர்பி பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும். பர்பி பதம் வந்த பிறகு ஒரு தட்டில் நெய் தடவி, சமமாக ஊற்றவும். இறுதியாக சதுர வடிவில் துண்டுகள் போடவும். சுவையான தேங்காய் பர்பி ரெடி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar