கும்பகோணம்: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கும்பகோணம் பகுதியில் உள்ள முக்கிய கோவில்களில் பொதுவிருந்து நடைபெற்றது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோவிலில் நேற்றுமுன்தினம் பகல் 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், பொது விருந்தும் நடந்தது. இதில் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோயில், சாரங்கபாணி கோவில், சக்கரபாணிகோவில், திருநாகேஸ்வரம் ராகுகோவில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடும் அதைத் தொடர்ந்து மதியம் பொது விருந்தும் நடந்தது. விருந்தில் வடை பாயாசத்துடன் கூடிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் மாரியப்பன் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் ராமச்சந்திரன், கிருஷ்ணகுமார் மற்றும் அந்தந்த கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பொதுவிருந்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு மதியம் உணவு உட்கொண்டனர்.