ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, பூலாங்குடி திருகண்ணுடைய அய்யனார் கோயில் வருடாந்திர உற்ஸவ விழாவை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக, மூலவர் அய்யனாருக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.