கொட்டாம்பட்டி: வலைச்சேரிபட்டியில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை சேர்ந்த பெண்கள் விநாயகர் சிலைகள், மண்பாண்டங்கள் செய்கின்றனர். இத் திட்டத்தின் தலைவி ஐஸ்வர்யா, செயலாளர் பிரேமா கூறுகையில் களிமண்ணால் ஆன ஒரு அடி விநாயகர் சிலை ரூ.700 க்கும் 7 அடி சிலை ரூ.9 ஆயிரத்திற்கு தயாரிக்கப்பட்டு மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அனுப்பி வருகிறோம். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் தயாரிக்கப்பட்ட சிலைகள் தேவைப்படுவோர் 85248 24867 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.