ஹிந்து மதத்தின் சிறப்பை இந்தியா, வெளிநாடுகளில் பரப்பிய விவேகானந்தரை போல தென்னாப்பிக்காவில் ஆன்மிக பணி செய்தவர் கானாநந்தா சுவாமி. இவர் அங்கு வாழும் மக்களுக்கு ஸனாதன தர்மத்தின் சிறப்பை எடுத்துக்காட்டியவர், அங்குள்ள பல குடும்பங்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். அவர் ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலும் ஆன்மிகத்தை பரவச்செய்தார். அங்குள்ள மக்களுக்கு தர்மத்தினை போதித்தார். தென்னாப்பிரி்க்காவில் அவர் கட்டிய சிவன் கோயில் பிரபலமானது. இங்கு வேதமந்திரம் முழங்கியும், லிங்காஷ்டகம், ஆதித்யஹிருதயம் பாடியும் சிவபெருமானை போற்றுகின்றனர். பெண்கள் துர்கை சூக்தம் பாடி அம்மனை வழிபடுகின்றனர். அனுமன் மந்திரத்துடனும் பூஜையை நிறைவு செய்கின்றனர். அங்குள்ள ஆன்மிக நுாலகம் பக்தர்களுக்கு பயன்பாடாக உள்ளது. ஸ்ரீராமநவமி, நவராத்திரி, சிவராத்திரியன்று நடைபெறும் வழிபாடுகளில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். கோயில் நடைதிறக்கும் நேரம்: அதிகாலை 4:30 – காலை 9:00 மணி.