அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அடுத்த வெள்ளியம்பதி ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 25 ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி, கடந்த 7 ந் தேதி புதன் கிழமை இரவு 7:00 மணிக்கு கிராம சாந்தி, 8 ந் தேதி வியாழக்கிழமை இரவு 8 : 00 மணிக்கு கோயில் புகுதல், 10 ந் தேதி சனிக்கிழமை காலை 7 : 00 மணிக்கு மாவிளக்கு எடுத்து வருதல், மாலை 6 : 00 மணிக்கு அருள்மிகு முரசனுக்கு மாலை அணிவித்தல், இரவு 7 : 00 மணிக்கு குண்டம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 11 ந் தேதி நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 : 00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை தர்சித்தனர். நாளை 13 ந் தேதி செவ்வாய் கிழமை இரவு 7 : 00 மறு பூஜை, 14 ந் தேதி புதன் கிழமை காலை 8 : 00 மணிக்கு அருள்மிகு முரசனுக்கு மாலை கழற்றுவதுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.