சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகை சரிபார்ப்பு பணி நான்காம் கட்டமாக அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2022 06:09
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று நான்காம் கட்டமாக 13 வது நாளாக ஆய்வு பணியை அறநிலைத்துறை அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள பழமை வாய்ந்த தங்க ஆபரணங்கள், தங்க நகைகள், வைடூரியங்கள், பொதுமக்கள் பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் தங்க நகைகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் கடலூர் மாவட்ட அறநிலைத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் கோவில் நகைகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் மூன்று கட்டமாக நகை சரிபார்க்கும் பணி நடந்து வந்த நிலையில் இடையில் நான்கு நாட்கள் நிர்வாக பணி காரணமாக ஆய்வு பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று நான்காம் கட்டமாக ஆய்வு பணி தொடங்கியுள்ளது. நேற்று 13 வது நாளாக ஆய்வு பணிகளை அறநிலை துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முதல் 2018 க் காண நகைகள் சரிபார்க்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.