கூடலுார்: கூடலுார் ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட முத்தாலம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து கோயில் வரை ஊர்வலமாக வந்தனர். முன்னதாக கரகாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து மாநில நெடுஞ்சாலை, மெயின் பஜார், நடுத்தெரு வழியாக கோயில் வரை ஊர்வலமாக சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஒக்கலிக காப்பு மகாஜன சங்க விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.